அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் பயணம் செய்வதற்கு பதிலாக சசிகலாவுடன் உடன் பயணம் செய்யலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஆவின் வைத்தியநாதன் என்பவர் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவுடன் பயணம் செய்ய முடியாது என்றும் அதற்காக சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் அவரை பொதுச்செயலாளராக ஆக்கி அவரது தலைமையின் கீழ் பணிபுரிய தயார் என்றும் இதற்கு ஓபிஎஸ் அவர்களும் ஒப்புக்கொள்வார் என்றும் ஆவின் வைத்தியநாதன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
ஓபிஎஸ் இபிஎஸ் இடையே நடைபெற்று வரும் பிரச்சனையை பயன்படுத்தி சசிகலாவை அதிமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.