Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதிர்காலம் சிறக்க நல்வாழ்த்துகள் - ஓபிஎஸ்!

Advertiesment
எதிர்காலம் சிறக்க நல்வாழ்த்துகள் - ஓபிஎஸ்!
, திங்கள், 20 ஜூன் 2022 (14:49 IST)
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் இன்று ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியானது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 12 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது.
 
இந்நிலையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது அதிகரப்பூரவ சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது பாராட்டுகள். 
 
தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர் மனம் தளராமல், அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும், அனைவரின் எதிர்காலம் சிறக்கவும் நல்வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை - எங்கெங்கு தெரியுமா?