Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்.. அதுதான் எனக்கான பரிசு! – சசிக்கலா வேண்டுகோள்!

Advertiesment
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்.. அதுதான் எனக்கான பரிசு! – சசிக்கலா வேண்டுகோள்!
, புதன், 10 நவம்பர் 2021 (11:09 IST)
கொரோனா மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதே தனக்கு அளிக்கும் பரிசு என சசிக்கலா தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த சசிக்கலா சமீப காலமாக தன்னை அதிமுக பொதுசெயலாளர் என குறிப்பிடுவதும், தொண்டர்களை சந்திப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள சசிக்கலா ” என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எனக்கு மலர்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் “அவ்வாறு ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், தற்போது கொரோனா  நோயால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துவிட்டவர்களுக்கும், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருக்கதே இன்னும் கடக்கல… இன்னொன்னா? – புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!