Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு சசிகலா வாழ்த்து..!

Advertiesment
ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு சசிகலா வாழ்த்து..!
, செவ்வாய், 20 ஜூன் 2023 (11:57 IST)
ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் சீனாவில் நடந்த நிலையில் இதில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த நிலையில்  வீராங்கனை பவானி தேவிக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
 
சீனாவில் உள்ள வுக்ஸி நகரில் நடைபெற்று வரும் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் மகளிருக்கான போட்டியில்  தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும், ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை நம் தமிழகத்திற்கு பெற்று தந்த பவானி தேவி அவர்கள் மென்மேலும் பல்வேறு சாதனைகளை புரிய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் 9 தமிழக மீனவர்கள் கைது : இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு எப்போது? அன்புமணி