Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசத்தின் வளர்ச்சிக்கான பட்ஜெட்.. பொருளாதாரத்தை முன்னேற்றும் பட்ஜெட்.. சரத்குமார்

sarathkumar

Siva

, புதன், 24 ஜூலை 2024 (06:46 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கலந்து பதிவாகி வருகிறது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் தலைவர்கள் இந்த பட்ஜெட்டுக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் பாஜகவில் தனது கட்சியை இணைத்த சரத்குமார் இந்த பட்ஜெட்டை பாராட்டியுள்ளார். இந்த பட்ஜெட் தேசத்தின் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்றும் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2024 - 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூகநீதி உள்ளிட்ட 9 முக்கிய அம்சங்களை கொண்டு இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், சாமானியர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வரவேற்கத்தக்க பட்ஜெட்டாகும்.

தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 15%-லிருந்து  6 % ஆக குறைத்திருப்பதும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டித்தருவதாக தெரிவித்திருப்பதும், புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத ஊதியம், பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு கட்டணக்குறைப்பு, புற்றுநோய்க்கான 3 மருந்துகளுக்கு வரிவிலக்கு, உயர்கல்வி மாணவர்களுக்கு 10 லட்சம் கடனுதவி, இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய தொழில்பயிற்சி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலத்திட்டங்களுக்காக 3 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு, மேலும், விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் துவங்குவதற்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு என பல்வேறு சிறப்பம்சங்களை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய ஆட்சி, ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியையும், உலகளவில் இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாகவும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த  பட்ஜெட், செயல்படுத்தப்படும் போது, இந்திய மக்களின் வருங்காலம் வளமாகும் என்பதை உணரலாம்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரை மாணவன் கடத்தல் வழக்கு! மனைவி சூர்யாவின் உடலை வாங்க மறுத்த ஐஏஎஸ் கணவர்..!