Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு..! எதிர்கட்சி எம்பிக்கள் நாளை போராட்டம்..!

Advertiesment
India Alliance Meet

Senthil Velan

, செவ்வாய், 23 ஜூலை 2024 (21:37 IST)
மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை (ஜூலை 24) போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
 
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என இந்தியா கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  
 
மேலும், ஆந்திரம், பீகார் ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை அறிவித்து, மற்ற மாநிலங்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவும், இரு மாநிலங்களைத் தவிர மக்களுக்கான பட்ஜெட் இது அல்ல எனவும் எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
 
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டது.

 
கூட்டத்தின் முடிவில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர்.. மேலும் சில முதலமைச்சர்கள் புறக்கணிப்பா?