Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்தை அடுத்து சரத்குமார் – அதிமுக வெற்றிக்குப் பொறுப்பாளர்கள் நியமனம் !

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (13:32 IST)
அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட தொண்டர்களை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஏற்கனவே நடந்த 18 தொகுதி இடைத்தேர்தல்களோடு சேர்த்து மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் இந்த தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா சாவா எனும் நிலைமையில் உள்ளது.

இந்த 4 தொகுதிகளிலும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இடையேக் கடுமையானப் போட்டி நிலவி வருகிறது. இருக் கட்சிகளும் தங்கள் கட்சிகளுக்கான வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக தங்கள் ஆதரவை அதிமுகவிற்கு அளித்துள்ளது.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை தொண்டர்களுக்கு அதிமுக வெற்றிக்கு உழைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் இப்போது அவரைத் தொடர்ந்து நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அதிமுகவுக்கு 4 தொகுதி இடைத்தேர்தலில் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.மேலும் அதிமுக வேட்பாளர்களுக்காக தேர்தல் பணி மேற்கொள்ள சமத்துவ மக்கள் கட்சி சார்பாக பொறுப்பாளர்களையும் நியமனம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments