Publish Date: Wed, 07 Apr 2021 (14:44 IST)
Updated Date: Wed, 07 Apr 2021 (14:45 IST)
சமக கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் காசோலை திரும்பிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 5 வழக்குகளில் சரத்குமார் மற்றும் ராதிகாவிற்கு ஒரு ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ரூ.5.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.