தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. ஆனால் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். அதற்கு மாமியார் வீட்டிலும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது.
ஆனால், அங்கு தான் பிரச்சனையே வெடித்தது. நடிப்பு சுதந்திரத்தை தாராளமாக பயன்படுத்திக்கொண்ட சமந்தா தி பேமிலி மேன் 2 தொடரில் மிகவும் மோசமான காட்சிகளில் நடித்ததால் குடும்பத்திற்குள் அவப்பெயர் உண்டாகிவிட்டதாக சமந்தாவை கணவர் கடிந்துக்கொண்டதாகவும் அதனால் அவர் வீட்டில் இருந்து வெளியேறியதோடு சமந்தா அக்கினேனி என்ற தனது பெயரை சமந்தா ரூத் பிரபு என மாற்றிக்கொண்டதாக செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் தற்போது நாகசைதன்யா பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக அதில் சமந்தா இல்லை. இருந்தும் மாமனாருக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார் சமந்தா. இதற்கு முந்தைய பிறந்தநாள் கொண்டதில் சமந்தா தவறாமல் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.