Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி..! – சேலத்தில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (14:37 IST)
சேலத்தில் அரசு பள்ளி மாணவி ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் மேச்சேரியை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள மேச்சேரி அரசு உயர்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தந்தையை இழந்த மாணவியை அவரது பெரியப்பா தினமும் பள்ளியில் கொண்டு வந்து விட்டு செல்வது வழக்கம்.

காலை பள்ளியில் ப்ரேயர் நடந்த நிலையில் அங்கு செல்லாமல் வகுப்பறையிலேயே அமர்ந்திருந்த மாணவி திடீரென தனது வகுப்பறை இருந்த மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறுமி மாடியிலிருந்து விழுந்ததை கண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவியை சந்தித்து நலம் விசாரித்த சேலம் கலெக்டர், மாணவி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாகவும், அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தீர்மானம்.. சட்டசபையில் தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்!

1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? ஊர் முழுவதும் போஸ்டர் அடிக்கும் அதிமுக!

தமிழகத்தில் இருந்து குழந்தை கடத்தி செல்லும் கும்பல்.. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments