Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா காலத்தில் 511 மாணவிகளுக்கு திருமணம்! – கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி!

கொரோனா காலத்தில் 511 மாணவிகளுக்கு திருமணம்! – கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி!
, புதன், 8 ஜூன் 2022 (13:26 IST)
கொரோனா காலத்தில் பள்ளிகள் செயல்படாத சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் 511 மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நீடித்து வருகிறது. கொரோனா காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கடும் ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த சமயம் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளும் முழுவதுமாக மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் இடைநிற்றலை தவிர்க்க மாணவர், மாணவிகளை தேடி சென்று பள்ளி கல்வியை தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு கல்வித்துறை நடத்திய ஆய்வில் கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த சமயத்தில் 511 மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த மாணவிகளை கண்டறிந்து அவர்களது படிப்பு தொடர தேவையான நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதிதிராவிடர் தொழில் முனைவோருக்கான கடனுதவி திட்டங்கள்! – தாட்கோ (TAHDCO) விண்ணப்பம்!