சேலம் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர்.. தீர்மானம் நிறைவேறியதாக எம்பி தகவல்..!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (13:57 IST)
சேலம் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்கப்படும் என திமுக எம்பி பார்த்திபன் கூறியுள்ளார். 
 
சேலம் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
இதுவரையில் விமானத்தில் பயணம் செய்யாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் 100 பேருக்கு தனது சொந்த செலவில் விமான பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்  
 
சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் விமான சேவை செயல்பட்டு வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் சேலத்தில் விமான சேவை கொண்டு வர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில்  சமீபத்தில் பெங்களூரு - சேலம் - கொச்சி வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்பட்டது. 
 
இந்த நிலையில் சேலம் விமான நிலையத்தை கலைஞர் விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் இயற்றப்பட்டு இருப்பதாக  சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி ரிவார்டு புள்ளிகளை பணமாக்கி கொள்ளலாம்.. டிஜிட்டல் பேமெண்ட்டில் புதிய புரட்சி செய்யும் செயலி..!!

ஒரே இரவில் கோடீஸ்வரர்: பெயிண்ட் கடை ஊழியருக்கு ரூ. 25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி! மறுநாளே வேலைக்கு சென்ற அதிசயம்..!

வெளிநாட்டுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமா? ரூ.60 கோடி கட்டிவிட்டு செல்லுங்கள்.. ஷில்பா ஷெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

25 நிமிடத்தில் ரூ.5 கோடி கடன் கிடைக்கும்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைவர் அறிவிப்பு..!

அயோத்தியில் 26 லட்சம் அகல் விளக்குகளை ஏற்ற திட்டம்.. கின்னஸ் சாதனை நடக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments