Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 16 February 2025
webdunia

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

Advertiesment
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

Siva

, செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (07:21 IST)
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
 
செப்டம்பர் 10ஆம் தேதி டிட்டோஜாக் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம் பிடிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 
 
அன்றைய தினம் சுமார் 30.5% ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் பள்ளிக்கு வரவில்லை என்று கூறியுள்ள பள்ளிக் கல்வித் துறை, சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.  
 
 செப்டம்பர் 10ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் ஆசிரியர்கள் செய்த நிலையில், தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறும் என்றும் தொடக்க கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு குழு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!