புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள அக்கரை மாவட்டத்தில் வசிப்பவர் கருப்பையா. இவரது மகள் ராஜலட்சுமி (19). இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடுஅரசு பெண்கள் கல்லூரியில் பிஎஸ்சி 2 ஆம் ஆண்டு படித்துவருகிறார். இவருக்குச் சிறு வயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வம் இருந்ததால் தன் பெற்றோருக்கு உதவியாக விவசாய பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில் இவர்களுக்குச் சொந்தமான விளைநிலம் உள்ளது. ஆனால் அதை உழுது வயலாக்கி, ஆழ்துழாய் கிணறு மூலம் பயிர்களை நடவு செய்ய தற்போது ஆட்கள் பற்றாக்குறை காணாப்படுகிறது. எனவே இந்தக்குறையைப் போக்க எண்ணிய ராஜலட்சுமி தானே தனியாக நடவு பணிகளை செய்ய முயன்றார்.
இதனையடுத்து 3 நாட்களில் ஒரு ஏக்கர் நிலத்தில் நெர்பயிர்களை நடவு செய்தார், இவரது துணிச்சலைக் கண்டு அந்த ஊர் மக்கள் அவருக்கு உதவினர்.ஆனால் மாணவி அதைத் தவிர்த்துவிட்டார்.
தற்போது தனிஆளாகவே ஒரு ஏக்கரில் விவசாயம் செய்து காட்டிய மாணவி ராஜலட்சுமியை எல்லோரும் பாரட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இவரது புகழ் வேகமாகப் பரவிவருகிறது.