Publish Date: Sat, 27 Aug 2022 (08:58 IST)
Updated Date: Sat, 27 Aug 2022 (09:00 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓணம் மற்றும் புரட்டாசி பூஜை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்குவதாக சபரிமலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் பலர் மாலை போட்டு தரிசனத்திற்காக வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகைக்காக செப்டம்பர் 7 முதல் 10ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
அதுபோல புரட்டாசி மாத பூஜைகள் செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த குறிப்பிட்ட நாட்களில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு பம்பையில் உடனடி முன்பதிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.