அமமுக பிரமுகரோடு ஸ்டாலின் மருமகன் பேரம் ?- சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ !

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (10:34 IST)
அமமுக வின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான பழனியப்பனோடு ஸ்டாலின் மருமகன் சபரீசன் பேரம் பேசியதாக ஒரு ஆடியோ சமூகவலைதளங்களில் பரவு வருகிறது.

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் படுதோல்வியால் தினகரனின் அமமுக கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி வருகிறது. கடந்த இரு தினங்களாக தங்க தமிழ்செல்வன் - டிடிவி தினகரன் முட்டல் மோதல் ஆடியோ ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் வகித்து வந்த அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயளாலர், அமமுக கொள்கை பரப்பு செயளாலர் என அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தினகரனின் வலதுகை  என அழைக்கப்பட்ட பழனியப்பனை திமுக தன் பக்கம் இழுக்கப் பார்ப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனே பழனியப்பனிடம் பேரம் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அந்த ஆடியோவில் பழனியப்பன் திமுகவுக்கு வந்தால் அவர் பொறுப்பில் சில சட்டமன்றத் தொகுதிகள் வழங்கப்படும் என்றும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவரே நியமிக்கலாம் எனவும் கூறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments