Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 28 March 2025
webdunia

மடையர்கள்தான் திமுக பின்னால் செல்வார்கள்! – எஸ்.வி.சேகர் ட்வீட்டால் சர்ச்சை

Advertiesment
மடையர்கள்தான் திமுக பின்னால் செல்வார்கள்! – எஸ்.வி.சேகர் ட்வீட்டால் சர்ச்சை
, சனி, 21 டிசம்பர் 2019 (12:40 IST)
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக 23ம் தேதி பேரணி நடத்த இருக்கும் நிலையில் எஸ்.வி.சேகர் பதிவிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் அனைத்து கட்சி பேரணி நாளை மறுநாள் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த பேரணியில் கலந்து கொள்ள மற்ற அரசியல் கட்சிகள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் பொது மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக நடத்த இருக்கு பேரணியை கேலி செய்யும் விதமாக தனது ட்விட்டரில் பதிவிட்ட எஸ்.வி.சேகர் ’அழிவை தேடிக்கொள்ள நினைப்பவர்கள், தேசதுரோகிகள், பொய்களை நம்பும் மடையர்கள் மட்டுமே திமுக நடத்தும் பேரணிக்கு செல்வார்கள்’ என கூறியுள்ளார்.

திமுக பேரணியை விமர்சிக்காமல் நேரடியாக அதில் கலந்து கொள்வோர் அறிவற்றவர் என்றரீதியில் எஸ்.வி.சேகர் பேசியிருப்பது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டாயத் திருமணம் பிடிக்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பெண் -காதலன் கவலைக்கிடம் !