Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடே பத்தி எரியுதே... இதுக்கு யார் காரணம்? ஸ்டாலின் பகீர்!

நாடே பத்தி எரியுதே... இதுக்கு யார் காரணம்? ஸ்டாலின் பகீர்!
, சனி, 21 டிசம்பர் 2019 (11:58 IST)
அதிமுக ராஜ்யசபா உறுப்பினர்கள் 11 பேரும், பாமக எம்.பி. அன்புமணியும் தான் நாடு முழுவதும் நடந்துவரும் போராட்டத்திற்கு காரணம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர்   போராடி வருகின்றனர். 
 
இந்நிலையில் திமுக சார்பில் வரும் 23 ஆம் தேதி குடியுரிமையை எதிர்த்து பேரணி ஒன்றை நடத்தவுள்ளனர். சமீபத்தில் ஸ்டாலின் விழா ஒன்றில் குடியுரிமை சட்டம் தொடர்பாக அதிமுகவை விமர்சித்தது பின்வருமாறு... 
 
இரட்டை குடியுரிமை என்றால் என்னவென்றே தெரியாமல், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையை வலியுறுத்துவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி கொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
webdunia
குடியுரிமை மசோதாவை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள்,  ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் ஆகியவைக்கு அதிமுக ராஜ்யசபா உறுப்பினர்கள் 11 பேரும், பாமக எம்பி அன்புமணியும் தான் காரணம். இந்த 12 பேரும் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து வாக்களித்து இருந்தால் அந்தச் சட்டம் நிறைவேறிய இருக்காது. 
 
அதேபோல வரும் 23 ஆம் தேதி பேரணி நடத்தியும் குடியுரிமை சட்டம் விவகாரத்தில் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை மிக விரைவில் நடத்துவோம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் டி செல்வராஜ் மறைவு - கலைஞர்கள் இரங்கல் !