Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிவிட்டரில் வீரமணியை வம்பிழுக்கும் சௌகிதார் சேகர் !

Advertiesment
டிவிட்டரில் வீரமணியை வம்பிழுக்கும் சௌகிதார் சேகர் !
, வெள்ளி, 3 மே 2019 (15:57 IST)
திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி வெளியிட்ட அறிக்கை ஒன்றைக் கேலி செய்துள்ள எஸ் வி சேகர் தமிழகத்தில் மழைப் பெய்யாததற்கு அவர்தான் காரணம் எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் போதுமான அளவு மழைப் பெய்யாததால் கடுமையான வெய்யிலும் தண்ணீர்ப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த  இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. மேலும் யாகம் நடத்திய விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது. இதற்கு பல இடங்களில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ’இந்திய அரசமைப்பு சட்டம் 51 அ பிரிவுக்கு எதிராக இந்து அறநிலையத்துறை செயல்பட்டுள்ளது. அண்ணா ஆட்சிக் காலத்தில் இருந்து அரசு அலுவலகங்களில் மதவழிபாடுகள் கடைபிடிக்கப்படுவதில்லை. இது அண்ணா பெயரில் ஆட்சி நடத்துபவர்களுக்கே கூட தெரியாதது வெட்கக்கேடு. அதனால் சம்மந்தபட்ட அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள நடிகர் எஸ் வி சேகர் தனது டிவிட்டரில் ‘வீரமணி போன்றவர்களால்தான் மழை பெய்வதில்லை. இந்த வெட்டி அறிக்கை விடுவதற்கு பதில் என்ன செய்யலாம்னு ரகசியமா சோதிடரை கேட்டா பரிகாரம் சொல்லிடுவாரே.’ எனக் கேலி செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதவி விலகவும் தயார்: திமுகவினருக்கும் ஷாக் கொடுத்த துரைமுருகன்