காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் அடிதடி சண்டை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த அடிதடி மோதலுக்கு நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் தான் காரணம் என பலரும் குற்றம் சாட்டிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி சண்டை உச்சகட்டத்தை சென்றுள்ள நிலையில் கட்சியின் தொண்டர்கள் அதனை மிகவும் வருத்தத்துடன் பார்த்து வருகின்றனர்.