Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு; அரசின் முடிவை வரவேற்கின்றேன்.- சீமான்

Advertiesment
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு; அரசின் முடிவை வரவேற்கின்றேன்.- சீமான்
, வியாழன், 29 செப்டம்பர் 2022 (15:28 IST)
அக்டோபர் 2ம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் பொது அமைதிக்கு இடையூறு விளையும் என இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு பல்வேறு மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு  நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தன் டிவிட்டர் பக்கத்தில்,

மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன்.  .

சரியான நேரத்தில் மிகச்சரியாக முடிவெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும்,காவல்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்!  இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்ய, வலிமையான சட்டப்போராட்டம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, இம்முடிவுக்கு ஆதரவாக தமிழக அரசுக்குத் துணைநிற்போமென உறுதியளிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி: திக்விஜய் சிங் அறிவிப்பால் பரபரப்பு!