Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியால் வரவும் இல்லை செலவும் இல்லை: துடுக்கு தனமாய் பேசும் ஆர்.எஸ்.பாரதி!

Advertiesment
ஆர்.எஸ்.பாரதி
, சனி, 5 செப்டம்பர் 2020 (12:58 IST)
ரஜினி வாழ்த்தியதால் எங்களுக்கு எந்த வரமும் வரப்போவதில்லை, செலவும் வரப்போவதில்லை என ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். 
 
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும் அதேபோல் பொருளாளராக டிஆர் பாலு இருவரும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக பொதுச்செயலாளராக கடந்த பல ஆண்டுகளாக க.அன்பழகன் இருந்த நிலையில் அவருடைய பதவிக்கு தற்போது துரைமுருகன் வந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. 
 
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் துரைமுருகனுக்கும், பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டிஆர் பாலுவிற்கும் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டார். 
 
இந்நிலையில் இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலுவும், துரைமுருகனும் ரஜினியின் நண்பர்கள். அதானாலேயே அவர் வாழ்த்தியுள்ளார். ரஜினி வாழ்த்தியதால் எங்களுக்கு எந்த வரமும் வரப்போவதில்லை, செலவும் வரப்போவதில்லை என பேசியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் 40 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!