கடலூர் மாவட்ட கே.என் பேட்டையில் உள்ள ஏடிஎம் மையத்தில் ரூ.7 லட்சத்து 50000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கடலூர் அருகேயுள்ளா கேஎன். பேட்டை என்ற கிராமத்தில் ஒரு தனியார் இயந்திரம் இயங்கி வருகிறது. இதில் நேற்று மாலை 7 மணிக்கு ஏடிஎம் மையத்தில் பணம் வைக்கும் ஊழியர்கள் 4 பேர் ரூ . 7 லட்சத்து 50 ஆயிரம் பணம் வைத்துள்ளனர்.
இதனையடுத்து, 4 பேரில் ஒருவரான கிருஷ்ணகுமார் இரவில் தனியாகச் சென்று, ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.7, லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். இன்று அதிகாலை வந்து பார்த்த ஏடிஎம் பராமரிப்பாளர் திருப்பாந்துரம் காவல் நி லையத்தில் புகார் அளித்தார்.