Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவர், வழக்கறிஞருடன் ஆஜரான அமைச்சர் பொன்முடி.. அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Advertiesment
Ponmudi
, செவ்வாய், 18 ஜூலை 2023 (17:45 IST)
அமைச்சர் பொன்முடி இன்று மாலை மகன் கௌதம் சிகாமணி உடன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் ஆஜரானதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு மருத்துவர் உடன் ஆஜராகி இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று காலை முதல் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்த நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை விசாரணை நடைபெற்றது
 
விசாரணைக்கு பின்னர் அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து சற்றுமுன் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  
 
இன்று சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் விசாரணைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சதுரகிரியில் 20 மணி நேரத்துக்குப் பின் கட்டுக்குள் வந்த காட்டுத் தீ: போராடி தீயை அணைத்த வீரர்கள்..!