கோவை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய அறிமுகப்படுத்தி உள்ள 24*7 என்ற சேவை மையத்தை இன்று திமுகவைச் சேர்ந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய அறிமுகப்படுத்தி உள்ள 24*7 என்ற சேவை மையத்ததின் 24 மணி நேர உதவி மைய எண் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து விரைவில் அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
10 மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ.2200 கோடி சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ள்ளது. 98,187 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு 6 மாதத்தில் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.