Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லி விமான நிலையத்தில் விமான விபத்து! – பயணிகள் அதிர்ச்சி!

Advertiesment
Delhi
, திங்கள், 28 மார்ச் 2022 (15:25 IST)
டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் அங்குள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ் ஜெட் எஸ்ஜி 160 என்ற விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜம்மு நோக்கி புறப்பட்டது. விமானநிலையத்திலிருந்து ஓடுதளத்தில் மேல் எழும்ப சென்றபோது விமானத்தின் வலது இறக்கை அங்கிருந்த கம்பத்தில் மோதியதால் சேதமடைந்தது.

இதனால் விமானம் உடனடியாக நிறுத்தப்பட்ட நிலையில் மாற்று விமானத்தின் மூலம் பயணிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுமக்களுக்காக நாளை 60% பேருந்துகள் இயக்கம்! – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!