Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 லட்சத்தை காணும்... செங்கல்பட்டு சுங்கச் சாவடியில் அடுத்த சர்ச்சை!

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (11:36 IST)
அடித்து நொருக்கப்பட்ட செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் என்ற பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் 18 லட்சம் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் என்ற பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் திருச்சிக்கு சென்ற பேருந்து ஒன்றின் ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.  
 
இந்த பிரச்சனையை வாக்குவாதத்தில் முடிந்து அதன் பின்னர் ஓட்டுநரும் நடத்துனரும் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களால் தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்தப் பேருந்தின் ஓட்டுனர் சுங்கச்சாவடிக்கு குறுக்கே பேருந்தை நிறுத்தி, வேறு எந்த வாகனமும் அந்த சுங்கச்சாவடியை கடக்க முடியாமல் செய்தார். 
 
இதனால் நீண்ட வரிசையில் பேருந்துகளும் மற்ற வாகனங்களும் காத்திருந்தன. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் திடீரென வன்முறையில் இறங்கி சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். சுங்கச்சாவடியில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியதால் அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  
 
இதனால் அந்த சுங்கச்சாவடி உடனே திறக்கப்பட்டு கட்டணமின்றி அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது. மேலும் சேதம் அதிகம் என்பதால் ஒரு வாரக்காலத்திற்கு கட்டணம் வசூலிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிகிறது.
 
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து மேலும் பரபரப்பை  ஏற்படுத்தும் வகையில் மோதலின் போது ரூ.18 லட்சம் பணத்தை காணவில்லை என வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments