டாப் லிஸ்டில் ராயபுரம்: சென்னை கொரோனா புள்ளி விவரம் வெளியீடு!

செவ்வாய், 12 மே 2020 (11:11 IST)
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 742 ஆக உயர்வு.  
 
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 798 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 798 பேர்களில் சென்னையில் மட்டும் 538 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4371. 
 
இந்நிலையில் சென்னையில் எந்தெந்த பகுதியில் கொரோனா தொற்று அதிகம் என்பது குறித்த தகவல்களை சற்று முன்னர் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் நேற்று முதல் மீண்டும் முதலிடம் பிடித்த ராயபுரம் இன்றும் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.
 
ஆம், ராயபுரத்தில் 742, கோடம்பாக்கத்தில் 713, திரு.வி.க நகரில் 590, தேனாம்பேட்டையில் 458, வளசரவாக்கத்தில் 374, அண்ணா நகரில் 349 பேர்களுக்கும் கொரோனா தாக்கியுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை: அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்