Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு... 20 பேர் தலைமறைவு ...

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (19:04 IST)
குரூப் 2 ஏ தேர்வு

குரூப் 1 தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என டிஎன்பிஎஸ்சி வாரியம் தெரிவித்துள்ளது. அதேசமயம் குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதால் காவல் துறையிடம் புகார் அளித்து, உரிய ஆவணங்களை ஒப்படைத்துள்ளது டிஎன்பிஎஸ்சி.
 
சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 4  தேர்வில் முறைகேடு நடந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குரூப் 2 தேர்விலும் முறைகேடுகள் நடந்திருந்க்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்காக சிபிசிஐடி -டிஜிபி ஜாபர் சேட் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 
இந்த விசாணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு தமிழக சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், குரூப் 2 ஏ முறைகேடு விவகாரம் குறித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் அளித்துள்ளது டி.என்.பி.எஸ்.சி. 
 
இதனையடுத்து,  குரூப் 2 ஏ தேர்வு மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளில் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில், முக்கிய நபரான இடைத்தரகர் ஜெயக்குமார், முதல்நிலை காவலர் சித்தாண்டி தலைமறைவாக உள்ள நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர்.
 
மேலும் , இந்த விவகாரத்தில் 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக உள்ளதாக தெரிகிறது. அந்த எண்களின் மூலம் அவர்கள் யார் யாரிடம் தொடர்பு கொண்டனர் என்ற விவரங்களை சிபிசிஐடி போலீஸார் சேகரித்துள்ளனர். 
 
சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் குரூப் 4 தேர்வு எழுதிய 10 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை எழும்பூரில் சிபிசிஐடி போலீஸார் அலுவலகத்தில் வைத்து 10 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments