சென்னை ஐ.ஓ.பி வங்கியில் ரூ.32 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (12:14 IST)
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.ஓ.பி வங்கி கிளையில் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை விருகம்பாக்கம் பங்கியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 24 மற்றும் 25ம் தேதி ஆகிய நாட்களும் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
 
அந்நிலையில், இதனைப் பயன்படுத்தி இந்த வங்கியில் உள்ள 2 லாக்கரை உடைத்து ரூ.32 லட்சம் பணத்தை சிலர் கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த 132 பைகளில் உள்ள தங்க நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
 
இதனையடுத்து வங்கி ஊழியர்கள் மற்றும் காவலாளிகளிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  குறிப்பாக, தினமும் பணிக்கு வரும் ஒரு காவலாளி இன்று வரவில்லை. எனவே, அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
 
போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments