ஒரே இரவில் 8 கடைகளில் கொள்ளை.. கோவில் உண்டியலும் காலி! – விராலிமலையில் மர்ம கும்பல்!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (09:43 IST)
விராலிமலையில் ஒரே நாள் இரவில் கடைகள், கோவிலில் மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் பிரதான சாலைகளில் உள்ள கடைகள் சில பூட்டு உடைக்கப்பட்டு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எலெக்ட்ரானிக் கடைகள், கணினி கடைகள் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் ஏராளமான மடிக்கணினி, மின்னனு சாதனங்கள் திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முருகன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதையும் அந்த மர்ம கும்பலே செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஒருநாள் இரவில் 8 கடைகள், ஒரு கோவில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயின் மாத்திரைகள் தரம் குறைந்தவைகளா? திரும்ப பெற உத்தரவு..!

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அதிமுக இடத்தை விஜய் பிடித்துவிடுவாரா? மீண்டும் திமுக ஆட்சியா? அரசியல் விமர்சகர்களின் கணிப்பு..!

விஜய்யின் தவெக 20 தொகுதிகளில் தான் வெற்றி பெறுமா? அதிமுக, திமுகவின் நிலை என்ன?

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அடுத்த கட்டுரையில்
Show comments