Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி பேருந்தை ஆட்டைய போட்ட பலே ஆசாமி! சார்ஜ் தீர்ந்ததால் தப்பி ஓட்டம்!

Advertiesment
theft
, ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (11:09 IST)
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான எலெக்ட்ரிக் பேருந்தை ஆசாமி ஒருவர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பதி தேவஸ்தானத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக மின்சார வாகனங்கள் பல இயங்கி வருகின்றன. அவற்றில் ஒரு வாகனத்தை டிரைவர் ஒருவர் சாலையோரமாக நிறுத்தி விட்டு டீக் குடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் பேருந்தை திருடிக் கொண்டு சென்றுள்ளார். பேருந்து காணாமல் போனதை தொடர்ந்து ஜிபிஎஸ் உதவியுடன் பேருந்தை ட்ராக் செய்ய தொடங்கினார்கள்.

பேருந்தில் பேட்டரி சார்ஜ் தீரும் வரை சுமார் 100 கி.மீ வரை ஓட்டி சென்ற மர்ம ஆசாமி பின்னர் பேருந்தை அப்படியே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருப்பதி போலீஸார் மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த பெண்கள்.. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நிறுத்தம்..!