Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடிகாராருக்கும் - போலீஸ்காரருக்கும் இடையே சாலையில் சண்டை ! வைரல் வீடியோ

Advertiesment
குடிகாராருக்கும் - போலீஸ்காரருக்கும் இடையே சாலையில் சண்டை ! வைரல் வீடியோ
, திங்கள், 1 ஜூலை 2019 (18:14 IST)
திருப்பூர் மாவட்டத்தில்  ஒரு குடிகாரருக்கும் - போலீஸ்காரருக்கும் இடையே நடந்த சண்டை சமூகவலைதளங்களில் பரவலாகிவருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி சாலை, எஸ், ஏ.பி சந்திப்பு அருகில் போக்குவரத்து போலீஸ் சுந்தரமூர்த்தி ( சப் - இஸ்ன்பெக்டர் )   வாகன சோதனை செய்து கொண்டிருந்தார்.
 
அப்போது ,முரளி என்பவர் தனது இரு சக்கரவாகனத்தில் அவ்வழியே சென்றுள்ளார். அவரை நிறுத்திய சுந்தரமூர்த்தி அவரை வாயை ஊதச் சொல்லியுள்ளார். அதில் முரளி மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டியது கண்டுபிடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் முரளியின் வாகனத்தை கைப்பற்றி அவர் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.
 
இதில் கோபமடைந்த முரளி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அருகில் நின்றிருந்த மற்றொரு போலீஸான பொன்னன்னன் முரளியை எச்சரித்துள்ளார். ஆனால் அதைக் கேட்காமல் முரளி தகராறு செய்ததாகத் தெரிகிறது. இந்த வாக்குவாதம் முற்றி பொன்னன்னனுக்கும் , முரளிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
 
பின்னர் பொன்னன்னன், முரளியை பிடித்து தரையில் இழுத்துக்கொண்டே சென்றார். பொதுமக்கள் சிலர் போலீஸுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். தற்போது இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றதாகவும் , இதுகுறித்து அனுப்பர் பாளையம் போலீஸார் விசாரித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை –நல்ல செய்தி சொன்ன வானிலை ஆய்வு மையம் !