Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தம்பிதுரையை திட்டி, தலைதெறிக்க ஓட வைத்த ஆர்கே நகர் பெண்கள்!

தம்பிதுரையை திட்டி, தலைதெறிக்க ஓட வைத்த ஆர்கே நகர் பெண்கள்!

Advertiesment
தம்பிதுரையை திட்டி, தலைதெறிக்க ஓட வைத்த ஆர்கே நகர் பெண்கள்!
, செவ்வாய், 28 மார்ச் 2017 (09:26 IST)
ஆர்கே நகரில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் என்பதால் தமிழக அமைச்சர்கள் முதல் ஆளும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஆர்கே நகரிலே முகாமிட்டவாறு இருக்கின்றனர்.


 
 
அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரனை வெற்றி பெற வைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் மக்களவை துணை சபாநாயகர் அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை வரை ஆர்கே நகரே கதி என தேர்தல் பணியில் பிஸியாக இருக்கிறார்கள்.

 

 
 
இந்நிலையில் ஆர்கே நகருக்கு வந்த மக்களவை துணை சபாநாயகரை பொதுமக்கள் விரட்டியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆர்கே நகர் வீதியில் தம்பிதுரையின் கார் செல்கிறது. ஆனால் அவரது காரை பொதுமக்கள் முற்றுகையிட்டவாறு இருக்கின்றனர்.
 
தம்பிதுரையின் காரை சூழ்ந்து கொண்டு பெண்கள் தம்பிதுரையை கையை நீட்டி நீட்டி அவரை காரை அடித்தும் திட்டுகின்றனர். இதனால் தம்பிதுரை காரை விட்டு வெளியே வராமல் அந்த இடத்தில் இருந்து அவசர அவசரமாக கிளம்பினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படகில் சென்று பிரச்சாரம் செய்ய தீபா திட்டமா?