Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படகில் சென்று பிரச்சாரம் செய்ய தீபா திட்டமா?

Advertiesment
, செவ்வாய், 28 மார்ச் 2017 (06:20 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து போட்டியிடும் தீபாவிற்கு படகு சின்னம் கிடைத்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த பகுதியில் மீனவர்கள் அதிகம் இருப்பதால் ஒருசில இடங்களில் படகில் சென்று ஓட்டு கேட்க தீபா தரப்பு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.



 


ஆர்.கே.நகரில் உள்ள மீனவர்கள் பலர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள் என்பதால் படகோட்டி ஸ்டைலில் படகில் சென்று வாக்கு கேட்டால் வாக்காளர்களை அசத்தலாம் என்பதே அவர்களது திட்டமாம்.

மேலும் தீபாவின் பிரச்சாரத்திற்காக சிறப்பு வேன் ஒன்று தயாராகி வருவதாகவும், அந்த வேனும் படகு வடிவத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தீபாவின் தேர்தல் அறிக்கையில் சுத்தமான குடிநீர்.. மீனவர்களுக்கு இலவச படகு, பெண்களுக்கு தையல் மிஷின் ஆகியவை இடம்பெற்றுள்ளதால் இந்த தொகுதியில் இவர் கணிசமான வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜஸ்தானில் காலில் போட்டு மிதிக்கப்படும் ஜெயலலிதா: அதிர்ச்சி தகவல்