Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்கே. நகர் கலவர பூமியானது; மண்டை உடைப்பு: போலீஸ் குவிப்பு! (வீடியோ இணைப்பு)

ஆர்கே. நகர் கலவர பூமியானது; மண்டை உடைப்பு: போலீஸ் குவிப்பு! (வீடியோ இணைப்பு)

Advertiesment
ஆர்கே. நகர் கலவர பூமியானது; மண்டை உடைப்பு: போலீஸ் குவிப்பு! (வீடியோ இணைப்பு)
, வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (09:14 IST)
ஆர்கே நகரில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தின் போது டிடிவி தினகரன் அணியினருக்கும், ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தினகரன் அணி எம்எல்ஏ ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 
 
ஆர்கே நகர் தேர்தலில் தினகரன் அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று ஆர்கே நகர் பகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகரில் ஓபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் ஜெயலலிதாவின் சவப்பெட்டியை வைத்து பிரச்சாரம் செய்தார்.
 
இது டிடிவி தினகரன் அணியினரை கோபமடைய வைத்தது. இதனால் அந்த பகுதியில் வந்த அவர்கள் ஓபிஎஸ்ஸை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். மற்றொரு பக்கம் ஓபிஎஸ் அணியினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட அங்கு கலவரம் வெடித்தது.

 

நன்றி: Vikatan
 
இந்த கலவரத்தில் இரண்டு பேரின் மண்டை உடைக்கப்பட்டது. அதில் ஒருவர் ஓபிஎஸ் அணியை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த மோதலில் டிடிவி தினகரன் அணியை சேர்ந்த மேலூர் எம்எல்ஏ-க்கு காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆர்கே நகரின் பல பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கலவரம் நடந்த நேதாஜி நகரின் 3-வது தெருவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக முக்கிய அமைச்சர் வீட்டில் திடீர் வருமான வரித்துறை ரெய்டு