தனியார் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே நடந்த போராட்டத்தில் வகுப்பறை மீது கல் வீசப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டன.
சென்னை புரசைவாக்கத்தில் அரசு உதவி பெறும் சர் சிடி.முத்தையா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நிர்வாகத்திற்கு எதிராக உள்ள 5 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள். மாணவர்களில் ஒரு பகுதியினர் ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடன் போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நிர்வாக தரப்பினர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆசிரியர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, ஆசிரியர்களுக்கு ஆதராவாக மாணவர்கள் வகுப்புகள் மீது கல் வீசியதுடன் அங்கு வைத்திருக்கும் பேனர்கள், போர்டுகளையும் அடித்து நொறுக்கினார்கள். மேலும் கண்காணிப்பு கேமராக்களையும் மாணவர்கள் பலர் அடித்து உடைத்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களை கலைத்த்னர். மேலும் இச்சம்பவம் குறித்து முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் நிர்வாகத்துடனும் ஆசிரியர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மாணவர்கள் பள்ளி மீது இருந்த கோபத்தை, ஆசிரியர்களுக்கு ஆதரவாக செயல்படும் தருணத்தை பயன்படுத்தி பள்ளியை சேதமாகியுள்ளனர். வழக்கமாக எல்லா தனியார் கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் இதுபோன்ற சந்தர்பத்துக்காக காத்து இருந்து செயல்படுவது இயல்பான ஒன்றுதான்.