Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நைஜர் பாலைவனத்தில் தனித்து விடப்பட்ட 20 குழந்தைகள் மரணம்

Advertiesment
நைஜர் பாலைவனத்தில் தனித்து விடப்பட்ட 20 குழந்தைகள் மரணம்
, வெள்ளி, 17 ஜூன் 2016 (06:17 IST)
சட்டவிரோதமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு அல்ஜீரியாவுக்கு சென்ற கும்பல் நைஜர் பாலைவனத்தில் ஏராளமான நபர்களை இறக்கிவிட்டுள்ளனர். அதில் 20 குழந்தைகள் உட்பட 34 பேர் மரணம் அடைந்துள்ளனர்.


 

 

 
மாலி மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களால் உயிருக்குப் பயந்து அண்டைநாடுகளுக்கு அகதிகளாக குடியேறச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொன்டிருக்கிறது. அந்தவகையில்,  பெரும்பாலானோர் சட்டவிரோதமாக அல்ஜீரியாவுக்கு பயணம் செய்து, பின்னர் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு செல்லும்போது கடந்த மாதம் படகு விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். 
 
அதுபோன்று சட்டவிரோதமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு கும்பல் நைஜர் பாலைவனத்தில் ஏராளமான நபர்களை இறக்கிவிட்டுள்ளனர். இறக்கிவிடப்பட்ட 20 குழந்தைகள், 9 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 34 பேர் கடந்த வாரம் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டதாக நைஜர் உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
போரில் இறந்து விடுவோம் என்று வாழும் ஆசையில் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் பலர் செல்லும் வழியிலே உயிரிழப்பது மிகவும் துக்கமான ஒன்று.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஞ்சாப்பின் உண்மையான பிரச்சனைகள் கவனிக்கப்பட வேண்டும்: ராஜினாமா குறித்து கமல்நாத் விளக்கம்