சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 800-ல் இருந்து 1,106 ஆக உயர்வு என தகவல்.
சென்னையில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் குறித்து ஊழியர்கள் கேட்டறிந்து வருகிறார்கள். எந்த தெருவில் பாதிப்பு அதிகம் வருகிறது என்பதை கண்காணித்து வருகிறோம். அந்த பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 800-ல் இருந்து 1,106ஆக உயர்வு என தகவல். இதில், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 173 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.