சென்னை அருகே பம்மலில் கூடுதலாக சாம்பார் கேட்ட விவகாரத்தில் உணவக ஊழியர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
	
சென்னை அருகே பம்மலில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தில் மேற்பார்வையாளராக அருண் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அந்த உணவகத்திற்கு உணவு பார்சல் வாங்குவதற்காக சங்கர் என்பவரும், அவரது மகன் அருண்குமாரும் வந்துள்ளனர்.
 
									
										
			        							
								
																	பார்சலில் கூடுதலாக ஒரு பாக்கெட் சாம்பார் வைக்குமாறு அவர்கள் கேட்க அதற்கு ஊழியர் மறுக்க வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சங்கருக்கும், உணவக மேற்பார்வையாளர் அருணுக்கு வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த சங்கர், மேற்பார்வையாளர் அருணை தாக்கியுள்ளார். இதில் நிலைக்குலைந்து கீழே விழுந்த அருண் தலையில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளார்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடம் விரைந்த நிலையில் சங்கர் மற்றும் அவரது மகன் அருண்குமார் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஒரு பாக்கெட் சாம்பாரால் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.