சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 60 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் பாறைகளை துளையிடும் இயந்திரம் மெதுவாக செயல்படுவதால் இன்னும் நீண்ட கால தாமதமாகும் போல் தெரிகிறது. இதனை அடுத்து மீட்புப்பணிகள் நிறுத்தப்படுமா? என்ற அச்சம் எழுந்தது
இந்த நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சற்று முன் பேட்டி அளித்த போது ’குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் கீழே கரிசல் மண் தென்பட வாய்ப்பு இருப்பதால் பள்ளம் தோண்டும் பணி தொடரும் என்றும் கூறினார்
மேலும் இயந்திரம் மூலம் நடைபெறும் மீட்புப்பணி திருப்தி அளிக்கவில்லை என்றும் பல்வேறு வழிகள் மூலம் குழந்தையை மீட்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
அதே நேரத்தில் தவறான நம்பிக்கையை ஊட்டக்கூடாது என்ற கவனத்தில் இருப்பதாகவும் குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணத்தை முன்னிட்டும் பாதியில் கைவிடப்பட்டது என்றும் தெரிவித்தார்
மேலும் குழந்தை சுர்ஜித் மீட்புப்பணிகள் வெளிப்படையாக நடைபெறுவதாகும், மீட்புப்பணிகள் குறித்த அனைத்து தகவல்களும் சுர்ஜித்தின் பெற்றோர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த ராதாகிருஷ்ணன் பஞ்சாப் நிபுணர் ஒருவர் மீட்பு பணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவரை உடனடியாக இந்த இடத்திற்கு வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ராதா கிருஷ்ணா அவர்கள் கூறினார்
ஓஎன்ஜிசி நிபுணர்களின் ஆலோசனையின்படியே மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் வேகமாக குழி தோண்டினால் பாறையில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் மிதமான வேகத்திலேயே பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார் மொத்தத்தில் குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் தாங்கள் செயல்பட்டு வருவதாகவும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்