Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

60 மணி நேர மீட்புப்பணி: சுர்ஜித் உயிருடன் மீட்கப்படுவாரா?

Advertiesment
60 மணி நேர மீட்புப்பணி: சுர்ஜித் உயிருடன் மீட்கப்படுவாரா?
, திங்கள், 28 அக்டோபர் 2019 (07:09 IST)
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததை அடுத்து அந்த குழந்தையை உயிருடன் காப்பாற்ற கடந்த 60 மணி நேரமாக மீட்பு படையினர் மற்றும் தேசிய மீட்பு படையினர் போராடி வருகின்றனர் 
 
துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்து மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்
 
ஆழ்துளை கிணறு அருகே ஒரு சுரங்கம் அமைப்பதற்காக நெய்வேலியில் இருந்து கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரத்தின் மூலம் தற்போது சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கம் அமைக்கபட்டு இருக்கும் போது இயந்திரத்தின் பல் சக்கரம் திடீரென பழுதானதை அடுத்து அந்த பழுதை சரிசெய்ய உடனடியாக பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இதனை அடுத்து அந்த இயந்திரம் தற்போது பதிவு செய்யப்பட்டு மீண்டும் தோண்டும் பணியை செய்து வருகிறது 
 
webdunia
110 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டும் பணி செய்யவிருக்கும் நிலையில் நேற்று இரவு வரை 35 அடி ஆழம் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. கடினமான பாறைகள் இருப்பதால் சுரங்கம் தோண்டும் பணியில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மீட்பு பணியினர் விடாமுயற்சியால் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் மீட்புப்பணி குறித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கூறியபோது ’ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் போடப்பட்டு வருவதாகவும், நிச்சயம் குழந்தை சுர்ஜித் காப்பாற்றப்படுவார் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிண|றுகளை உடனடியாக மூடுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மீட்புப் பணிகள் தொடங்கி 60 மணி நேரம் ஆகிவிட்ட நிலையிலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட்டார் நம்பிக்கையில் உள்ளனர். இந்த இக்கட்டான நிலையால் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள எட்டு கிராமங்களில் நேற்று யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரியனை மிக அருகில் ஆராயவுள்ள ஐரோப்பிய விண்கலம் - விரிவான தகவல்கள்