Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் 3 முறை தனியார் பள்ளிகளுக்கு,2 முறை தனியார் நட்சத்திர விடுதிக்கு மிரட்டல். அச்சத்தில் மக்கள்!

தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் 3 முறை தனியார் பள்ளிகளுக்கு,2 முறை தனியார் நட்சத்திர விடுதிக்கு மிரட்டல். அச்சத்தில் மக்கள்!

J.Durai

, செவ்வாய், 8 அக்டோபர் 2024 (13:59 IST)
கடந்த சில நாட்களாக மதுரை மாநகரில் உள்ள பள்ளிக்கூடங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் இன்று
மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள டிவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததுடன், பெற்றோருக்கு குழந்தைகளை அழைத்து செல்லுமாறு அறிவிப்பு வந்துள்ளது.
 
மதுரையில் தொடர்ந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று 4 பள்ளிகளுக்கும், அக்டோபர் 2 தேதி 4 நட்சத்திர தங்கு விடுதிகளுக்கும், நேற்று மதுரை பேச்சிகுளம் பகுதியில் உள்ள பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலமாக விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 4வது முறையாக மதுரை டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள டிவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கும் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்துமிடம், பள்ளியின் பேருந்து, மாணவர்களின் சைக்கிள் வகுப்பறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 
 
பாதுகாப்பு நடவடிக்கையாக மாணவர்கள் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கின்றனர். சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் இது போன்று வதந்திகளை கிளப்பும் நபர்கள் மீது மதுரை மாநகர காவல் துறையும் மற்றும் சைபர் கிரைம் போலீசார் இணைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து காட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை மாதவரத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்....