இரண்டு முறை பிரதமரான நரேந்திர மோடியை தமிழக மக்கள் ஏற்கவில்லை என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத அரசியலா? மனித அரசியலா? மனு நீதியா? சமூக நீதியா? மாநில உரிமையா? பாசிச அடக்கு முறையா? என ஒரு கை பார்த்து விடுவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா கூட்டணி வென்றால் கலைஞரின் முழக்கமான மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது இந்தியாவின் முழக்கமாகும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி இரண்டு மோடி பிரதமர் ஆகியிருக்கிறார். அந்த இரண்டு தேர்தல்களிலும் தமிழ்நாட்டு மக்கள் அவரை ஏற்கவில்லை என குறிப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், இப்போது மூன்றாவது முறையும் தமிழ்நாடு அவரை ஏற்க போவதில்லை என்று கூறியுள்ளார்.
இளைஞரணி மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்