Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிவாரணப் பொருட்களை பேருந்தில் இலவசமாக எடுத்து செல்லலாம்

Advertiesment
நிவாரணப் பொருட்களை பேருந்தில் இலவசமாக எடுத்து செல்லலாம்
, செவ்வாய், 20 நவம்பர் 2018 (12:52 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கும் நிவாரணப் பொருட்களை அரசுப் பேருந்தில் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர். தமிழகமெங்கிலிருந்தும் அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
webdunia
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படும் நிவாரணப் பொருட்களை அரசுப் பேருந்தில் எந்த கட்டணமும் இன்றி எடுத்து செல்லலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூவர் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகை பரபரப்பு விளக்கம்