Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

கஜா புயல்! உதவி தேவைப்படுவோர் எங்களை அழையுங்கள்... ஹரிஸ் கல்யாண் அழைப்பு

Advertiesment
Gaja Storm
, செவ்வாய், 20 நவம்பர் 2018 (12:13 IST)
கஜா புயலால் பாதித்தவர்களுக்கு உதவுவதற்காக  நடிகர் ஹரிஸ் கல்யாண் தனது நண்பர்களுடன் இணைந்து சேலத்தில் இருந்து பொருட்களை ஒரு வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்.
 
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில் "நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள மக்களுக்கு நிறைய பேர் உதவிகளை செய்து வருகிறார்கள். எனினும் இன்னும் சில பகுதி மக்களுக்கு போதிய அடிப்படை உதவிகள் போய்சேரவில்லை என்பதை அறிந்தோம்.

எனவே நண்பர்களுடன் இணைந்து பிஸ்கட், மெலுகு வர்த்தி. கொசுவர்த்தி, தீப்பட்டி, அரிசி, உடைகள். மளிகை பொருட்கள் உள்பட அத்தியவாசிய பொருட்களை சேகரித்துள்ளோம். இந்த பொருட்களை சேலத்தில் இருந்து ஏற்றிக்கொண்டு இன்று டெல்டா மாவட்டங்களுக்கு fகொண்டு வருகிறோம்.

எந்த பகுதி மக்களுக்கு என்ன உதவி வேண்டும் என்பதை 7550110836  என்ற தொலைப்பேசி எண்ணுக்கு அழைத்து கூறினால் முடிந்த பொருள் உதவியை அளிப்போம்" என்று கூறியுள்ளார்.

மேலும் தங்களை போல் உதவி செய்யும் அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' டிரெய்லர் நாளை வெளியீடு