Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணம் தாண்டிய உறவு: பெண் வெட்டிக் கொலை!

Advertiesment
Death

Sinoj

, வியாழன், 14 மார்ச் 2024 (16:04 IST)
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே பேருந்திற்காக  நின்றுகொண்டிருந்த பெண் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
எப்போதும் வென்றா என்ற பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மனைவி சின்னமணி. 
 
கணவர் வைரமுத்து இறந்துவிட்டதால் புதுக்கோட்டையில் தனது 2 குழந்தைகளுடன் சின்னமணி வசித்து வந்தார்.
 
இந்த நிலையில், வைரமுத்துவின் சகோதரர் ராஜேஷ் கண்ணன் மற்றும் சின்னமணி இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், சின்னமணிக்கு திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாகவும் அதைக் கைவிடாததாலும் ஏற்கனவே இருந்துவரும் சொத்துப் பிரச்சனையாலும்  ஆத்திரமடைந்த ராஜேஷ் இன்று பேருந்திற்காக நின்று கொண்டிருந்த சின்னமணியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக தகவல் வெளியாகிறது.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்!