Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளி.. வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு..!

சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளி.. வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு..!
, புதன், 11 அக்டோபர் 2023 (12:53 IST)
எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் திடீரென சபாநாயகர் இருக்கை முன் அமளியில் ஈடுபட்டதால் அவை காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற பதவியில் சட்டமன்றத்தில் இன்னும் ஓபிஎஸ் இருந்து வரும் நிலையில் அவரை மாற்ற வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
மேலும் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய போது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேச முயன்றதால் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 
 
இதனால் இந்த விவகாரத்தில் அதிமுகவினர் அமளிகையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் சபாநாயகர் இருக்கை முன் அதிமுக எம்எல்ஏக்கள் ஈடுபட்டதால் அவைக்காவலர் மூலம் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். 
 
மேலும் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சட்டம் விதி என்ன செல்கிறதோ அதன்படி தான் நடக்கிறேன் என்றும் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை