Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேவர் தங்க கவச பெட்டக வழக்கு.. உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு

Advertiesment
தேவர் தங்க கவச பெட்டக வழக்கு.. உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு
, செவ்வாய், 10 அக்டோபர் 2023 (15:51 IST)
தேவர் தங்க கவச பெட்டகத்தை தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இணைந்து வங்கியில் எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தேவர் தங்க கவசம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில்  ஓபிஎஸ் தரப்பு வாதாடியபோது, ‘ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தான் உள்ளார், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால் தற்போது அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி மற்றும் பொருளாளராக திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் உள்ளனர் என அதிமுக தரப்பு வாதிட்டது. மேலும் வங்கியில் இருக்கும் கவசத்தை அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவாலயம் நிர்வாகிகள் இணைத்து தான் எடுக்க முடியும் என்றும் அதிமுக தரப்பு வாதிட்டது. 
 
அதேபோல் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், அதிமுக பொருளாளர் என அதிமுக கட்சி சம்பத்தப்பட்ட வங்கி கணக்குகளில் மாற்றப்பட்டுள்ளது  என்பதையும் அதிமுக தரப்பு தனது வாதத்தில் எடுத்துரைத்தது.
 
இருதரப்பு வாதங்களையும் கேட்ட  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தேவர் தங்க கவச பெட்டகத்தை தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இணைந்து வங்கியில் எடுக்க உத்தரவிட்டனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஸ்லாமிய கைதிகள் விவகாரம்: முதலமைச்சர் பதில் ஏமாற்றமளிப்பதாக தமிமுன் அன்சாரி பேட்டி..!