நாடு முழுவதும் முன்பதிவில்லா குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதை அடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில்களில் தற்போது நான்கு முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் கூட சில நேரங்களில் நிற்கக்கூட இடம் இல்லாத அளவுக்கு பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நான்கிலிருந்து இரண்டாக முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பல மாநிலங்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் இடமில்லாததால் முன் பதிவு செய்த பெட்டிகளில் பயணம் வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக குளிர்சாதன பெட்டிகளில் பயணிப்பவர்கள் கூட இந்த கூட்டத்திற்கு அஞ்சி கதவுகளை சாத்திக் கொள்கின்றனர். ஆனால் ஆத்திரமடைந்த மக்கள் ரயில்களை சேதப்படுத்தும் காட்சிகளும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் 26 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.